பிருத்வி ஆதித்யா இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குறிப்பிட்ட நேரத்தில் முடித்த சந்தோஷத்தில் இருக்கிறார் தயாரிப்பாளர் கார்த்திகேயன்.
“எங்கள் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடித்து விட்டோம். கிட்டத்தட்ட பாதி படப்பிடிப்பு முடிந்து விட்டதில் ரொம்பவே சந்தோஷம்.
அறிமுக இயக்குனராக இருந்தாலும் பிரித்வியின் திட்டமிடல் தான் இதற்கு முக்கிய காரணம்” என்றவர் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதாக தெரிவித்தார்.
பிரவீன் குமார் ஒளிப்பதிவில், ராகுல் படத்தொகுப்பில், வைர பாலன் கலை வண்ணத்தில், தமிழ் தெலுங்கு இரு மொழிப்படமாக தயாராகும் இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்பது விசேஷம்.