ஹாரிஸ் ஜெயராஜூக்கு கல்தா : சாமி 2 இசையமைப்பாளர் ஆனார் தேவி ஸ்ரீ பிரசாத்!

ரி இயக்கத்தில் விக்ரம் – த்ரிஷா நடிப்பில் ரிலீசாகி மெகா ஹிட்டான படம் ”சாமி”.

விக்ரமின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனைப் படங்களில் ஒன்றாக அமைந்த இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறார் டைரக்டர் ஹரி.

முதல் பாகத்தில் நடித்த த்ரிஷாவோடு, இன்னொரு நாயகியாக கீர்த்தி சுரேஷூம் இதில் நடிக்கிறார். அதோடு அப்படத்தில் வேலை செய்த தொழில்நுட்பக் கலைஞர்களும் கூட சிலர் இப்படத்தில் இணைகிறார்கள்.

குறிப்பாக சாமிக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த இரண்டாம் பாகத்திலும் இணைவார் என்று தான் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ஹாரிஸூக்குப் பதிலாக தேவி ஸ்ரீ பிரசாத்தை சாமி 2 படத்தில் இசையமைப்பாளராக்கியிருக்கிறார் இயக்குநர் ஹரி.

ஏற்கனவே ஹரி இயக்கிய ஆறு, சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் தான் தேவி ஸ்ரீ பிரசாத் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் ஹாரிஸ் ஜெயராஜூக்கு ஏன் இந்த இரண்டாம் பாகத்தில் கல்தா கொடுத்தார் என்பது பற்றிய எந்த விபரத்தையும் வெளியிடவில்லை ஹரி.

இதற்கும் இப்பட அறிவிப்பை ‘இருமுகன்’ விழா மேடையில் இயக்குநர் ஹரி வெளியிட்ட போது இசையமைப்பாளர் ஹாரிஸையும் மேடைக்கு அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Devi Sri PrasadHarris JayarajKeerthy SureshSaamy 2TrishaVikram
Comments (0)
Add Comment