முதல்ல இந்த ‘தங்கமகன்’ படம் வி.ஐ.பி யோட ரெண்டாவது பார்ட் இல்லேங்கிற விஷயத்தை தெளிவுபடுத்திக்கிறேன்.
ஏன்னா இந்தப்படம் ஆரம்பிச்சதிலேர்ந்து இது வி.ஐ.பியோட செகண்ட் பார்ட்டுங்கிற மாதிரியே தொடர்ச்சியா செய்திகள் வந்துச்சு. அதனால் இதை சொல்லிடுறேன். வி.ஐ.பிக்கும் தங்கமகனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அது அது வேற லெவல் ஸ்டோரி, இது வேற லெவல் ஸ்டோரி. சினிமாவுல சொல்லப்படாத விஷயங்களே இல்லை. எல்லாத்தையும் சொல்லிட்டாங்க. ஆனா இதுல காட்சிகள் எல்லாமே ரொம்பப் புதுசா இருக்கும். அது ரசிகர்கள் தங்களோட ஃபேமிலியோர பார்த்து ரசிக்கிற மாதிரி இருக்கும். ஹீரோ என்பதையும் தாண்டி ஒரு தயாரிப்பாளருக்கான பொறுப்போடு பேசுகிறார் தனுஷ்.
அதென்ன ரஜினி பட டைட்டில்கள் எல்லாமே எனக்குத்தான் சொந்தம்னு சொல்லிக்கிட்டிருக்கீங்களாமே..? என்ற கேள்வியை கேட்காமல் இருக்க முடியுமா?
நீங்களே சொல்லுங்க இப்போ நான் மட்டும் தான் ரஜினி சார் படங்களோட டைட்டிலை வெச்சிருக்கிட்டு இருக்கேனா..? ‘படிக்காதவன்’ டைட்டில் வெச்சு கிட்டத்தட்ட அஞ்சு வருஷமாயிடுச்சு. அதுக்கப்புறம் இப்பத்தான் மறுபடியும் ரஜினி சார் படத்தோட டைட்டிலை வெச்சிருக்கேன். என்றவர் அதற்கான காரணத்தை சொல்லும் போது அதில் நியாயமும் இருந்தது.
ஹீரோவோட பேர் ‘தமிழ்’ங்கிறதுனால முதல்ல இந்தப் படத்துக்கு ‘தமிழ்மகன்’னு டைட்டில் வெச்சிருந்தோம். அப்புறம் தயாரிப்பாளர் தான் ‘தங்கமகன்’ டைட்டிலை வெச்சா பொருத்தமா இருக்கும்னு சொன்னார். பணம் போடுற தயாரிப்பாளர் சொல்லும் போது அதை நாம ஏத்துக்கிட்டுத்தானே ஆகணும்?
அதெல்லாம் சரி இப்பவும் படங்கள்ல சிகரெட் பிடிக்கிறதை மட்டும் விடவே மாட்டேங்கிறீங்களே..? என்றதும் நிதானமாக பதில் வருகிறது.
என்னைப் பொருத்தவரை ரியல் ஃலைப்ல எனக்கு சிகரெட் பிடிக்கிற பழக்கம் கெடையாது. என்னை ஃபாலோ பண்ற ரசிகர்களும் என்னோட ரியல் ஃலைபை மட்டும் ஃபாலோ பண்ணினாப் போதும். திரையில பார்க்கிறதெல்லாம் கற்பனை. அது நிஜமில்லை. டைரக்டர் நீங்க இந்த கேரக்டருக்கு சிகரெட் பிடிக்கணும்னு சொன்னா கண்டிப்பா பிடிப்பேன். அதுதான் ஒரு நடிகனா என்னோட வேலை. இதுதான் என்னோட முடிவும் என்றார் தனுஷ்.
நியாயமாத்தான் இருக்கு!