இன்றைக்கு கனடாவில் போய் தனியாக இசை நிகழ்ச்சி நடத்துகிற அளவுக்கு அனிருத் வளர்ந்திருக்கிறார் என்றால் அதற்கு முதல் முழுக்காரணம் அவருடைய குடும்ப நண்பரான நடிகர் தனுஷ் தான்.
‘3’ படத்தில் வெளியான ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் எப்படி அனிருத்தை பட்டி தொட்டி எங்கும் கொண்டு போய் சேர்த்ததோ? அதே அனிருத் இசையமைத்தார் என்று சொல்லித்தான் சிம்பு பாடிய ‘பீப்’ பாடலும் அவரது புகழை கெடுக்கும் விதமாக பட்டி தொட்டியெங்கும் பரவி விட்டது.
பீப் சாங் விவகாரத்தால் அனிருத்தை விட்டு அடுத்தடுத்த பெரிய பட வாய்ப்புகள் கை நழுவிப்போக, அவருடைய ஒரே நம்பிக்கையாக தனுஷ் மட்டுமே இருந்தார்.
ஆனால் இப்போது தனுஷும் தன்னுடைய கேரியரை மனதில் கொண்டு அனிருத்துடன் படங்களில் இணைந்து வேலை செய்வதை முற்றிலுமாக தவிர்த்து விட்டு அவருடைய இடத்தை சந்தோஷ் நாராயணனுக்கு கொடுக்க ஆரம்பித்து விட்டாராம்.
ஏற்கனவே ‘கொடி’ படத்தில் அனிருத்துக்குப் பதிலாக சந்தோஷ் நாராயணனை கமிட் செய்த தனுஷ் அடுத்தடுத்து தான் தயாரிக்கின்ற, நடிக்கின்ற படங்களில் கூட சந்தோஷ நாராயணையே ரெகமெண்ட் செய்வதாக தெரிகிறது.
‘பீப் சாங்’ செய்தி முதலில் வெளியான போது கூட அனிருத் அப்படி செய்திருக்க மாட்டார் என்று தான் நம்பினார் தனுஷ், அதன்பிறகு விஷயம் கோர்ட் – கேஸ் என்று விரிவடைந்து கொண்டு போகவும் உஷாரானவர் இனி அனிருத்துடன் எக்காலத்திலும் கூட்டணி இல்லை என்று முடிவெடுத்து விட்டார்.
சர்ச்சையில் சிக்கிய நேரத்தில் அனிருத் தன் பக்கம் இல்லையே என்கிற கோபத்தில் இருந்த சிம்புவும் இப்போது அனிருத்துடன் நல்ல நட்பில் இல்லை. இப்படிப்பட்ட சில்லியான விஷயத்தில் சிக்கி அவமானப்பட்டு விட்டானே? என்று தனுஷும் அனிருத்தை கழற்றி விட்டு விட்டார்.
ஆக சிம்பு தனுஷ் இருவரும் அனிருத்தை கழற்றி விட அவரோ, இருவருக்கும் பொதுவாக அஜித்தின் புதுப்படம், சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ரெமோ’ என தன் பங்குக்கும் கூட்டணியை மாற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டார்.