ரஜினியுடன், சமுத்திரக்கனி, சம்பத், நானே படேகர் மற்றும் எக்கச்சக்கமான சினிமா நட்சத்திரங்கள் நடித்து இருக்கும் இப்படத்தை நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ் இந்தப்படத்தை தனது யுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறார்.
முதலில் 2 பாயிண்ட் ஒ திரைப்படம் தான் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் அப்படத்தின் தொழில்நுட்ப வேலைகள் முடியாத காரணத்தால் முதலில் காலாவை ரிலீஸ் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்காக ஏப்ரல் 27 என்று தேதியும் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களாக புதிய படங்கள் ரீலீஸ் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால் காலா ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியானது.
தற்போது திரையுலகப் போராட்டம் சுமூகமாக முடிந்து மீண்டும் படங்கள் ரிலீசாக ஆரம்பித்திருப்பதால் ரஜினியின் காலா படத்தின் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ரஜினியின் காலா படம் உலகம் முழுக்க ஜூன் 7ம் தேதி வெளியாகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.