தேடி வந்த ஹாலிவுட் சான்ஸ் : தனுஷ் உற்சாகம்

‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் மூலம் இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுக்க உள்ள சினிமா ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தார் தனுஷ்.

அந்த ஒரு பாடலே அவருக்கு ராஞ்சனா என்ற ஹிந்திப்பட வாய்ப்பை பெற்றுத்தந்தது. ராஞ்சனாவும் ஹிட்டானதைத் தொடர்ந்து அடுத்து இரண்டு ஹிந்திப்படங்களில் நடிக்கப் போகும் அவரை இன்னும் உற்சாகப்படுத்தும் விதமாக ஹாலிவுட் பட வாய்ப்பு தேடி வந்திருக்கிறது.

ஈரானியன் மற் றும் பிரெஞ்ச் படங்களின் பெண் இயக்குநர் மார்ஜனேசடரபி யின் டைரக்‌ஷனில் தயாராகும் ‘ஜானி ஆப் தி ஃபகிர் ஹு காட் டிராப்ட் இன் தி கியா கப் போர்ட்’ படம் மூலம் ஹாலிவுட் டில் நுழைகி றார் தனுஷ்.

மந்திரங்கள் மூலம் பேய்களை விரட்டுபவராக நடிக்கி றாராம் தனுஷ். தனது அம்மாவின் கோரிக்கையை ஏற்று டெல்லியிலிருந்து பாரீஸ் சென்று அங்கு சீக்ரெட் மிஷன் ஒன்றை முடிப்பது தான் இதில் தனுஷின் கேரக்டராம்.

எல்லோரும் ஹாலிவுட் பட வாய்ப்பு கிடைக்காதா? என்று ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தனுஷைத் தேடி வந்த இந்த வாய்ப்பு பற்றி என்ன சொல்கிறார்?

முழு நீள ஹாலிவுட் படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியையும் , உற்சாகத்தையும் தந்துள்ளது. நான் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது சரியாக இருக்கும் என்பது இயக்குநர் மர்ஜோன் சட்ராபி அவர்களின் கணிப்பு. இப்படம்  என்னிடமிருந்து வெவ்வேறு விதமான அம்சங்கள்கொண்ட கதாபாத்திரங்களை வெளிக்கொண்டு வரும் ஓர் பயணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறன்.

எப்போதும் நான் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்கும் சந்திக்கும் சவால்களுக்கும் எனக்கு உறுதுணையாக இருந்து என்னை உற்சாகப்படுத்தி கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் , ஊடகங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்கிறார் தனுஷ்.

வாழ்த்துகள் ப்ரோ…

Dhanushhollywoodranjanaதனுஷ்ராஞ்சனாஹாலிவுட்
Comments (0)
Add Comment