பாவனா விவகாரத்தில் அடுத்த அதிரடி! : கேரள நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார் திலீப்

ரு பழிவாங்கல் எண்ணம் எந்தளவுக்கு ஒரு மனிதனை கீழ்த்தரமான வேலையைச் செய்யத்தூண்டும் என்பதற்கு உதாரணமாகியிருக்கிறார் பிரபல மலையாளர் நடிகர் திலீப்.

தனது மனைவி மஞ்சு வாரியாரை தன்னிடமிருந்து பிரிக்கக் காரணகர்த்தாவாக இருந்த நடிகை பாவனாவை பழி வாங்குவதற்காக ஆட்களை செட் செய்து கும்பலாக கற்பழிக்க வைக்கிற கேவலமான காரியத்தில் இறங்கிய நடிகர் திலீபை நேற்று அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது கேரள அரசு.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் திலீபுக்கு இன்னொரு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது கேரள நடிகர் சங்கமான அம்மா சங்கம்.

அதன்படி இன்று திலீப் மீதான நீதிமன்ற நடவடிக்கை தொடர்பாக, கேரள நடிகர்கள் சங்கமான ”அம்மா”வின் அவசரக் கூட்டம் பொதுசெயலாளர் மம்முட்டியின் கொச்சி வீட்டில் இன்று நடைபெற்றது.

இதில் நடிகர் திலீப்பை நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவதாக அறிவித்ததோடு, பாவனா வழக்கின் அனைத்து குற்றவாளிகளையும் தண்டிக்க முழு ஒத்துழைப்பு வழங்க எப்போதும் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. காலை 11 மணியளவில் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் நடிகர்கள் மோகன்லால், பிருத்விராஜ், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, திலீப் கேரள தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்தும், கேரளா திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு ஆகியவற்றில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திலீப்பின் இரண்டாவது மனைவியான காவ்யா மாதவனுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தலைமறைவாக இருக்கும் அவரை வலைவீசித் தேடிவருகிறது கேரள போலீஸ்!

எப்பேர்ப்பட்ட ஃபேமிலி!

actor sileepAmmaBhavanadileepdileep dismiss from amma malayala nadigar sangam
Comments (0)
Add Comment