ரெண்டு படம் ஹிட்டு : ஆனாலும் கெடைக்கலியே அட்லிக்கு லட்டு!!!

ன்னடா இது அட்லிக்கு வந்த சோதனை என்று தான் கோடம்பாக்கமே கவலை கொண்டிருக்கிறது.

‘ராஜா ராணி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இரண்டாவது படமே அட்லிக்கு விஜய்யை வைத்து ‘தெறி’யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மேற்படி இரண்டு படங்களுமே அட்லிக்கு மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்து விட்டது. அதிலும் ‘தெறி’ திரைப்படம் நல்ல வசூலையும் தந்தது.

இப்படி இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த பிறகும் அட்லிக்கு புதுப்படத்தை இயக்க இன்னும் தயாரிப்பாளர் சிக்கவில்லையாம்.

ஆனால் அட்லியோ ஜீவாவை வைத்து ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தையும், நிவின் பாலியை வைத்து தமிழ், மலையாளம் என இருமொழிப்படத்தையும் சொந்தமாக தயாரிக்க கிளம்பி விட்டார்.

அட்லி இயக்கத் தயாராகும் புதுப்படம் தெறியை விட அதிக பட்ஜெட்டை பிடிக்கும் என்பது ஒருபுறமிருக்க, விஜய் மாதிரி இன்னொரு மாஸ் ஹீரோவைத்தான் வைத்து இயக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அதனால் தான் தயாரிப்பாளர் தேடலும் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

‘மாஸ்’ ஹீரோன்னா யாரு சூர்யாவா அட்லி?

AtleeDirector AtleeTheriஅட்லிஇயக்குநர் அட்லிதெறி
Comments (0)
Add Comment