கதையெல்லாம் பெரிய விஷயமில்லை, காசு வந்தால் போதும் என்று முடிவெடுத்து உப்புமா படங்களாக நடித்தது தான் அதற்கு முக்கிய காரணம். .
அப்படிப்பட்டவர் முதல்முறையாக நயன்தாரா பாணியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம் ஒன்றில் நடிக்க ஓ.கே சொல்லியிருக்கிறார்.
இப்படத்தை ‘மசாலா படம்’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்த ஜமீல் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
ஹன்ஷிகாவுடன் இரண்டு படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறேன், அப்போது அவர் என்னை ஈர்த்தார். அதனாலேயோ என்னவோ இந்த கதையை எழுதும்போதே அவரின் இமேஜ் இந்த கதையில் பொருந்தி விட்டது.
இந்த கதையில் இன்னும் சில கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது, அதற்காக பிரபலமான நடிகர்களை தேர்வு செய்து வருகிறோம் என்று படத்தைப் பற்றிச் சொல்கிறார் இயக்குனர் ஜமீல்.
ஜியோஸ்டார் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராவ் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் விஜய் வர்மா சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை தருவதாக உறுதி அளித்திருக்கிறார்கள். ஜூன் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது, படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும்.