என்னா பங்சுவாலிட்டி! : லாரன்ஸை வியக்க வைத்த பி.வாசு

டந்த சில வருடங்களாகவே தமிழ்சினிமாவின் உச்சிக் குடிமியைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் பேய் சீசனுக்கு ‘சந்திரமுகி’ படத்தின் மூலம்  பிள்ளையார் சுழி போட்டவர் இயக்குநர் பி.வாசு.

ஒருவாரம் ஓடினாலே ஹிட் என்றாகி விட்ட சுருங்கச் சூழலில் 800 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடி வசூல் வேட்டையாடிய படம். அந்தப் படத்தைத் தொடர்ந்து கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் அவர் இயக்கத்தில் ரிலீசான சிவலிங்கா படமும் பயங்கர ஓட்டம்.

எப்படி கன்னடத்திலிருந்து சந்திரமுகியை தமிழில் ரீமேக் செய்தாரோ அதேபோலவே இந்த சிவலிங்கா படத்தையும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தமிழில் அதே சிவலிங்கா டைட்டிலோடு ரீமேக் செய்திருக்கிறார்.

வருகிற 27-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகப் போகும் இந்தப்படத்தில் ராகவாவுக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்திருக்கிறார். பி.வாசுவின் மகன் சக்தி வாசுவும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.

ரீமேக்னா அப்படியே எடுத்து படம் பண்ணல, தமிழுக்கு ஏத்த மாதிரி சில மாற்றங்களை திரைக்கதையில செஞ்சிருக்கேன். இது ஒரு ஹாரர், க்ரைம், த்ரில்லர் படம்னு சொல்லலாம். ரயில்ல ஒருத்தர் புறாவோடு பயணம் செய்வார். அந்த பெட்டியில அவரைத் தவிர வேற யாருமே இருக்க மாட்டாங்க. அப்போ அங்க பார்வை தெரியாத ஒருத்தர் வருவார். அவர் தவறி வெளியில விழுந்துடக் கூடாதுன்னு இவர் உதவி செய்யப் போக அந்த பார்வை தெரியாதவராலேயே இவர் கொலை செய்யப்படுவார்.

அந்தக் கொலையைப் பார்த்த ஒரே சாட்சி அந்த புறா மட்டும் தான். இப்படிப்பட்ட சூழல்ல புறாவை ஐ விட்னசா வெச்சு அந்தக் கொலையில எப்படி துப்பு துலங்குதுங்கிறது படமே என்ற வாசு படத்தில் புறாவும் ஒரு முக்கியமான கேரக்டராக வருகிறது என்றார்.

படத்தில் பி.வாசுவின் டைம் பங்சுவாலிட்டியைப் பார்த்து வியந்து போனாராம் ஹீரோ ராகவா லாரன்ஸ்.

ஆமாம் சார், நான் எப்பவுமே சாயங்காலம் 6 மணிக்கு மேல ஷூட்டிங் வைக்க மாட்டேன். ஆனா லாரன்ஸ் அவரோட படங்களை இயக்குறப்போ முதல் நாள் நைட்டு 2 மணி வரைக்கு ஷூட்டிங் வெச்சுட்டு அடுத்த நாள் 7 மணிக்கு மறுபடியும் ஷூட்டிங்கை ஆரம்பிப்பாராம். நான் தினமும் சீனையெல்லாம் எடுத்துட்டு அவரை சாயங்காலம் 6 மணிக்கு வீட்டுக்கு அனுப்புனது அவருக்கே ஆச்சரியம். இப்படியெல்லாம் படம் எடுக்க முடியுமான்னு கேட்டார். எனக்கு ஓய்வெடுக்க நெறைய டைம் கெடைக்குதுன்னு சொன்னார் என்றார்.

பி.வாசுவின் இந்த டைம் பங்சுவாலிட்டியைப் பார்த்தே ரொம்ப பிடித்துப் போன ராகவா லாரன்ஸ் சார் மறுபடியும் உங்க கூட சேர்ந்து ஒரு படம் பண்ணனும் என்று கேட்டிருக்கிறாராம்.

சந்திரமுகியில் எப்படி வடிவேலுவின் காமெடி ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டதோ? அதேபோல இந்தப்படத்திலும் படம் முழுக்க வருகிற வடிவேலுவின் கேரக்டர் செய்ற காமெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்கிறார்கள்.

இந்தப் படத்துல வடிவேலுவோட கேரக்டர் பேர் என்ன தெரியுமா?

‘பட்டு குஞ்சம்.’

கேட்கும் போதே சிரிப்பு வருதுல்ல..?

P.vasuRaghava LawrenceSivalingaSivalinga Movie News
Comments (0)
Add Comment