டைவர்ஸ் வாங்கியாச்சு; அப்புறம்? : அமலாபாலை அலற விட்ட விஜய்

ந்தப் பூனையும் பால் குடிக்குமா? என்கிற ரேஞ்சிலேயே தான் பொது நிகழ்ச்சிகளில் நடந்து கொள்வார் இயக்குநர் ஏ.எல்.விஜய்.

அப்படிப்பட்டவர் தான் பின்னாளில் தன் தெய்வத் திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்த அமலாபாலை உருக உருக காதலித்து கடந்த 2014ம் ஆண்டு குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

எந்த வேகத்தில் இயக்குநர் விஜய்யை திருமணம் செய்தாரோ? அதே வேகத்தில் அவரிடமிருந்து விவாகரத்து கேட்டு பிரிந்து விட்டார் அமலாபால்.

திருமணத்துக்குப் பிறகு அமலாபால் படங்களில் நடிப்பதை விஜய் வீட்டார் விரும்பவில்லை. அதை அமலாபால் சட்டை செய்யாதது தான் இந்தப் பிரிவுக்குக் காரணம் என்றார்கள் கோலிவுட்டில்.

அதோடு வெளியில் சொல்ல முடியாத வேறு சில முக்கியமான காரணங்களும் கூட உண்டு, அதன் வீரியம் பொறுக்க முடியாமல் தான் அமலாபால் விவாகரத்து கேட்டதும் எதுவும் சொல்லாமல் விஜய் சம்மதம் சொல்லி விட்டார் என்றும் சொல்லப்பட்டது.

இதற்கிடையே சில வாரங்களுக்கு முன்பு ஆங்கில ஊடகம் ஒன்றில் மனம் விட்டுப் பேசிய அமலாபால் ”முதிர்ச்சியில்லாத வயதில் திருமணம் செய்ததால் தான் நான் விஜய்யை பிரிய நேர்ந்தது. இப்போதும் அவரைக் காதலிக்கிறேன்” என்று பேசியிருந்தார் அமலாபால்.

ஆனால் அமலாபாலின் முடிவில் ரொம்பவே மனசுடைந்து போன விஜய் மீண்டும் அவரோடு சேர்ந்து வாழ விரும்பவில்லை என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறாராம்.

அதோடு தன் உண்மையான காதலை உதாசீனப்படுத்திய அமலாபாலை பழி வாங்கும் விதமாக வீட்டில் பெற்றோர்கள் செய்து வைக்க இருக்கும் இரண்டாம் திருமணத்துக்கு சம்மதம் சொல்லவும் முடிவு செய்திருக்கிறாராம்.

பக்கத்துல இருக்கிறப்போ தெரியாத அருமை, தூரத்துல இருக்கும் போது தான் தெரியும்.

A. L. Vijayactress amala paulAmala PaulAmala Paul DivorceDirector A.L.VijayDirector Vijay
Comments (0)
Add Comment