இவர் தான் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மியூசிக் டைரக்டராம்! : சீக்ரெட்டை உடைத்தார் கௌதம் மேனன்

சிம்புவுடன் ‘அச்சம் என்பது மடமையடா’ ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குநர் கெளதம் மேனன் அடுத்து தனுஷ் நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கியிருக்கிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் வேலைகளை முடுக்கி விட்டிருக்கும் கெளதம் மேனன் படத்தின் டீஸர், மற்றும் ஒரு பாடல் டீஸரை சமீபத்தில் அடுத்தடுத்த கால இடைவெளியில் வெளியிட்டார். ஆனால் எதிலுமே படத்தின் இசையமைப்பாளர் பெயர் மட்டும் இடம்பெறவில்லை.

இதனால் இவளோ சூப்பர் ஸாங் போட்டிருக்கிற இந்த மியூசிக் டைரக்டர் யாரா இருக்கும்? என்கிற கேள்வி தனுஷ் ரசிகர்களின் மண்டையை குடைந்து கொண்டே இருந்தது.

ஒருவேளை ஏ.ஆர். ரகுமானின் மகன் அமீன் ரகுமானாக இருக்குமோ? அல்லது மீண்டும் இசையமைக்கத் துவங்கியிருக்கும் சிம்புவாக இருக்குமோ என்று ஆளாளுக்கு சந்தேகக் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

கிட்டத்தட்ட ஒரு டைட்டில் போல சஸ்பென்ஸ் வைத்த இயக்குநர் கெளதம் மேனன் இசையமைப்பாளர் விபரத்தை வெளியிட்டிருக்கிறார்.

ஆமாம், நடிகர் தர்புகா சிவா தான் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்துக்கு இசையமைக்கிறார். சசிகுமாரின் கிடாரி படத்தில் தர்புகா சிவாவின் பின்னணி இசையும், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அந்தப்படத்தில் இடம்பெற்ற வண்டியில நெல்லு வரும் பாடல் 2016-ம் ஆண்டின் சிறந்த பாடலாகவும் அமைந்தது.

தொடர்ந்து நடிப்பிலும், இசையமைப்பதிலும் கவனம் செலுத்தி வரும் தர்புகா சிவா ’எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் வந்த பிறகு கூடுதலாக பெரிய பேனர் படங்கள் தன்னைத் தேடி வரும் என்கிற எதிர்பார்ப்போடு இருக்கிறார்.

கவுதம் மேனன் – தனுஷ் இணையும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இசையமைப்பாளராக தர்புகா சிவா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Darbuka SivaDhanushEnai Noki Paayum ThotaEnai Noki Paayum Thota Music Director
Comments (0)
Add Comment