ஆனந்தியுடன் டூயட் பாட வந்த பாலிவுட் நடிகர்!

‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தொடர்ந்து ஆனந்தி நடிப்பில் தயாராகி வரும் படம் ‘எங்கே அந்த வான்’.

மனசுக்கு இதமாக சுகமளிக்கும் காதலைத் தேடும் ஒரு பெண்ணின் கவிதைப் பயணமாக தயாராகும் இப்படத்தில் ஆனந்திக்கு ஜோடியாக ரோஹித் சரப் அறிமுகமாகிறார். இவர் ஹிந்தியில் பரபரப்பாக ஓடிய ஹிச்கி (HICHKI) படத்தில் நடித்துள்ளார். ராணி முகர்ஜி டீச்சராகவும் ரோஹித் சரப் மாணவனாகவும் நடித்திருந்தனர். மேலும் ஷாருக்கான் நடித்த ‘டியர் சிந்தகி’ படத்திலும் நடித்துள்ளார். இவர் தமிழில் நடிப்பதற்காக சிறிது தமிழ் கற்றிருக்கிறார். இவர்களுடன் பிரதாப் போத்தன், அழகம்பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

படப்பிடிப்பு கும்பகோணம், கோபிசெட்டிபாளையம்,சென்னை, ஹைதராபாத் போன்ற பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் உச்சக்கட்ட காட்சி டெல்லியில் படமாக்கப்பட்டு படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.

லிங்குசாமி, உதயசங்கர் போன்ற பிரபல டைரக்டர்களிடம் பணிபுரிந்த ராஜசேகர் துரைசாமி முதன் முறையாக தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். குறும்படம் மற்றும் விளம்பர படங்களுக்கு இசை அமைத்து வரும் தீனதயாளன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

AnandhiEnge Andha VaanMovie News
Comments (0)
Add Comment