‘எதற்கும் துணிந்தவன்’ ட்ரெய்லர் வெளியீடு!

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இதில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 10ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகிறது.இந்நிலையில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர்கள் சூர்யா. சத்யராஜ். வினய். சூரி, நடிகை பிரியங்ககா மோகன், இசையமைப்பாளர் டி இமான், படத்தொகுப்பாளர் ரூபன் உள்ளிட்ட படக்குழுவினருடன் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களும் கலந்து கொண்டனர்.

Actor SuriyaActress Priyanka MohanDirector PandirajEtharkkumThunindhavan movie