‘பேமஸ் பிரிமியர் லீக்’ : கிரிக்கெட்டில் களமிறங்கும் சின்னத்திரை நட்சத்திரங்கள்

தெருவுக்குத் தெரு டாஸ்மாக் இருக்கிற மாதிரி கிராமத்து தெருக்கள் வரைக்கும் கிரிக்கெட் விளையாட்டு பசங்க மனசுக்குள்ள தம் கட்டி உட்கார்ந்தாச்சு.

அதுக்கு முன்பாகவே சின்னத்திரை நட்சத்திரங்கள் எல்லோரும் சேனல்கள் மூலமா குக்கிராமத்து ரசிகர்கள் வீட்டுக்குள்ளே சென்று செம பேமஸ்.

அந்த பேமஸ் சின்னத்திரை நட்சத்திரங்களை கிரிக்கெட் விளையாடுகிற அளவுக்கு கொண்டு போய் இப்போ அந்த விளையாட்டுப் போட்டிகளுக்கே ‘பேமஸ் பிரிமியர் லீக்’குன்னு பேர் வைக்கிற அளவுக்கு ஒரு புதிய கிரிக்கெட் போட்டியை விளையாடப் போறாங்களாம்.

இந்த ‘பேமஸ் பிரிமியர் லீக்’ போட்டியில தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் நான்கு அணிகளாக பிரிந்து விளையாடப் போகிறார்கள்.

இதில் தமிழ்நாடு அணிக்கு ‘தமிழ் தலைவாஸ்’ என்று டக்கரான பெயரை வைத்திருக்கிறார்கள். இந்த கிரிக்கெட் போட்டியின் தமிழ்நாடு அணியின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் திரைப்பட நடிகர் பாபிசிம்ஹா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீரர்களையும், உடையையும் (ஜெர்ஸி) அறிமுகம் செய்தார்.

ஜெர்ஸியை அறிமுக செய்துவிட்டு பேசிய பாபிசிம்ஹா, ‘எனக்கு கிரிக்கெட் விளையாட தெரியாது. அதிகம் பார்த்ததும் கிடையாது. இந்த விழாவில் கலந்துக் கொள்ள என்னை அழைத்தார்கள். சொன்னவுடனே எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ‘தமிழ் தலைவாஸ்’ அணி இந்த போட்டியில் வெற்றியடைய வாழ்த்துக்கள். ‘பேமஸ் பிரிமியர் லீக்’ (FBL) மேலும் மேலும் வளர வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்’ என்றார்.

நவம்பர் மாதம் 27ம் தேதி தொடங்கி, டிசம்பர் 24ம் தேதி வரை நடைபெறும் இந்த ‘பேமஸ் பிரிமியர் லீக்’ கிரிக்கெட் போட்டியில் மேலும் பங்கு பெறும் ஒவ்வொரு அணிகளுக்கான பெயர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாடு அணிக்கு ‘தமிழ் தலைவாஸ்’, தெலுங்கு அணிக்கு ‘தெலுங்கு தண்டர்ஸ்’, கன்னட அணிக்கு ‘கன்னடா கிங்ஸ்’, கேரளா அணிக்கு ‘மலையாளி ஹீரோஸ்’ என்று பெயர்கள் வைத்துள்ளனர்.

தமிழ் தலைவாஸ் அணியில், விவேக், சாக்‌ஷி சிவா, இசையமைப்பாளர் தமன், எஸ்.பி.பி.சரண், விஜய் ஆனந்த், தேவ்ஆனந்த், ஈஸ்வர், ராஜ்குமார், ஜெயந்த், சதீஷ், ஸ்ரீதர், சேத்தன், பாலாஜி, தினகர், சித்தார்த், சத்யா, லோகேஷ், கனி, வேலு, பவின் ஆகியோர் விளையாடுகிறார்கள். அணிக்கு பானுபிரகாஷ் மேனேஜராக பணியாற்ற. அபிஷேக் ரமேஷ் பயிற்சியாளராக கமிட்டாகியிருக்கிறார்.

கோப்பையோட வாங்க ‘தமிழ் தலைவாஸ்’!

bobby simhaFamous Premiere LeagueFamous Premiere League NewsThaman
Comments (0)
Add Comment