அதன்பிறகு தனது ரசிகர் மன்றங்களை கலைத்து விட்டு தான் உண்டு தன் வேலை உண்டு என்று அமைதியாக இருக்கிறார். ஆனாலும் ஒவ்வொரு படம் ரிலீசாகும் போது அந்தப் படங்களை அவரது ரசிகர்கள் வரவேற்று கொண்டாடுவதை நிறுத்தவில்லை. அதை அஜீத்தும் கண்டுகொள்வதில்லை.
அஜீத்தின் அந்த அமைதியை பார்த்த பலரும் எந்த வம்பு தும்புக்கும் போகாதவர் என்று ஆரம்ப காலங்களில் புகழ்ந்து தள்ளினார்கள். ஆனால் சமீபகாலமாக தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளிலும் அந்த அமைதி தொடர்வதை விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர்.
குறிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளை கண்டித்து நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்தில் அஜீத் கலந்து கொள்ளாதது அவருக்கு கடும் எதிர்ப்பை சம்பாதித்து கொடுத்து விட்டது.
சமீபத்தில் நடிகர் சங்கம் சார்பில் நடந்த அறவழிப் போராட்டத்தில் அஜித் கலந்து கொள்ளவில்லை என்பதால் முன்னணி வார இதழ் ஒன்று ‘அஜித்திற்கு தமிழ் உணர்வு இல்லை’ என்று அட்டைப்படத்தில் செய்திக்கட்டுரை ஒன்றை வெளியிட்டது.
எப்போதுமே வார இதழின் அட்டைப்படத்தில் அஜீத்தின் புகைப்படத்தைப் பார்த்ததும் புகழ்ந்து தான் கட்டுரை எழுதியிருப்பார்கள் என்று எதிர்பார்த்து ஆவலோடு அந்த வார இதழை வாங்கிப் பார்த்த ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி தான் கிடைத்தது.
காரணம், அதில் ”அஜீத்தின் சமீபத்திய எதற்கும் வர மாட்டேன். ஆனால் சம்பளம் வாங்கிக் கொண்டு சொகுசாக வாழ்வேன்” போன்ற அவருடைய சுயநல நடவடிக்கைகளை அந்த வார இதழ் கடுமையாக சாடியிருந்தது.
இதனால் கோபமான அஜீத் ரசிகர்கள் சிலர் அந்த பத்திரிகையை கண்டித்து பேனர், போஸ்டர் அடித்தனர், அது பரவாயில்லை, ஆனால், அந்த பத்திரிகை போஸ்டரை அவர்கள் எரித்து தங்கள் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்கள். சிலர் அந்த பத்திரிகை அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு மிரட்டவும் செய்திருக்கிறார்கள்.
ஆனால் இதுகுறித்து அஜீத்தே வாய் திறக்காத போது அவரது ரசிகர்கள் அஜீத்தின் அனுமதியே இல்லாமல் அல்லது அவரது பார்வைக்கு கொண்டு செல்லாமல் இதுபோன்ற வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டது அஜீத்தை வருத்தப்பட வைத்திருக்கிறதாம்.
”எனக்கு தனிப்பட்ட முறையில ரசிகர்கள் வேணாம்னு தான் மன்றங்களைக் கலைச்சேன், அப்படி இருக்கும் போது என் சார்பா இவங்களை யார் எதிர்வினை ஆற்றச் சொன்னது? எனக்காக வக்காலத்து வாங்க இவங்க யாரு? என்று நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டாராம் அஜீத்.
இப்படிப் பேசுறதுக்குப் பதிலா உங்க ரசிகர்களை நீங்களே ஒரு அடி அடிச்சிருக்கலாம் அஜீத்!