‘தல 57’ ஃபர்ஸ்ட் லுக் எப்போது? : மௌனம் கலைக்கிறார் டைரக்டர் சிவா

‘வீரம்’, ‘வேதாளம்’ படங்களின் வெற்றிகளைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்தை வைத்து இயக்கி வருகிறார் சிறுத்தை சிவா.

இன்டர்போல் அதிகாரியாக அஜித் நடித்து வரும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், முக்கியமான கேரக்டர் ஒன்றில் அக்‌ஷரா ஹாசனும் நடிக்கிறார்கள்.

80 சதவீதப் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் இன்னும் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் என படத்தைப் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை. அவ்வப்போது படப்பிடிப்பு புகைப்படங்கள் மட்டுமே அஜித் ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்து வந்தது.

வேதாளம் படத்துக்குப் பிறகு மிகப்பெரிய இடைவெளி ஆகி விட்டதால் இந்தப்படத்தை அஜித் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இருந்தாலும் எல்லாவற்றும் ஒரு எல்லை உண்டு என்று சொல்வது போல காக்க வைத்தது போதும், டைட்டில் விபரத்தையாவது வெளியிடுங்கள் என்று இயக்குநர் சிவாவுக்கு கோரிக்கை வைத்தபடியே அஜித் ரசிகர்கள் ஆங்காங்கே போஸ்டர்களையும் கூட ஒட்டி வருகிறார்கள்.

கடந்த சில தினங்களாகவே வதம் அல்லது விவேகம் இந்த இரண்டு டைட்டில்களில் ஒன்று தான் தல 57 படத்தின் டைட்டிலாக இருக்கும் என்று ஒரு செய்தி பரவி வருகின்றது.

இந்நிலையில் இனிமேலும் தாமதம் செய்வது சரியாக இருக்காது என்கிற முடிவுக்கு வந்த டைரக்டர் சிவா வருகிற பிப்ரவரி 2-ம் தேதி அதாவது நாளை மறுநாள் தல 57 படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஒருவேளை பர்ஸ்ட் லுக் வெளியாகாவிட்டாலும் அது என்றைக்கு வெளியாகும் என்கிற தகவலாவது அன்றைய தினம் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

ajithAjithkumarAK 57Director SivaSivaThala 57
Comments (0)
Add Comment