இயக்குநர்கள் நாயகர்கள் ஆனதைத் தொடர்ந்து இசை அமைப்பாளர்களும் நடிக்கத் துவங்கினார்கள். அந்த வரிசையில் தற்போது கிரிக்கெட் ப்ளேயர்களும் களம் இறங்கியுள்ளனர். விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் இர்பான் பதான் நடிக்கிறார். அவரைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் நடித்து வருகிறார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரண்ட்ஷிப் படத்தில் கதாநாயகியாக லாஸ்லியா நடிக்கிறார்
ஷேண்டோ ஸ்டுடியோஸ் & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் “படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தான் ஹீரோ.
பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பிரபலமான லாஸ்லியா தற்போது ஹர்பஜன் சிங்குடன் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார் .
“பிரண்ட்ஷிப் ” இந்திய மொழிகளில் சம்மர் 2020 இல் திரைக்கு வர இருக்கிறது .