குயின் அனுஷ்கா ஷெட்டி நடிக்கும், “காதி”!

UV கிரியேஷன்ஸ், ஃபர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்க, குயின் அனுஷ்கா ஷெட்டி நடிப்பில், கிரியேட்டிவ் இயக்குநர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் உருவாகியுள்ள பான் இந்தியா பிரமாண்ட படைப்பான  “காதி” (GHAATI) – ஜூலை 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தென்னிந்திய திரையுலக குயின் அனுஷ்கா ஷெட்டி “காதி” படத்தில் மிரட்டலான அதிரடி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.  அவரது பிறந்தநாளில் வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதாபாத்திரத்தை  அறிமுகப்படுத்தும் கிளிம்ப்ஸ் வீடியோ, திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்தது.

UV கிரியேஷன்ஸ்  வழங்கும் இப்படத்தினை, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஜாகர்லமுடி ஆகியோர் இணைந்து  தயாரிக்கின்றனர். வேதம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அனுஷ்கா மற்றும் கிரிஷ்  இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். UV கிரியேஷன்ஸ்  பேனரில் அனுஷ்கா நடிக்கும் நான்காவது படம் இது என்பது குறிப்பிடதக்கது. அனுஷ்கா, விக்ரம் பிரபு மற்றும் மற்ற நடிகர்கள் ஒரு ஆற்றை கடந்து பயணிக்கின்ற காட்சி இடம்பெற்றுள்ளது, இது படத்தின் தீவிரமான மற்றும் உணர்வுப்பூர்வமான பயணத்தைக் குறிப்பதாக அமைந்துள்ளது.பான் இந்தியா பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம்  தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வருகிற ஜூலை 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Actor Vikram Prabhuactress anushka shettydirector Krish JagarlamudiGhaati movie