ஜி என் ஏ பிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ் ஆர்,விநாயகா சுனில் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கிராண்மா’. இப்படத்தை ஷி ஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார்.இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
இவ்விழாவில்
படத்தின் தயாரிப்பாளர் ஜெயராஜ். ஆர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மேலும் நிகழ்ச்சியில் படக்குழு உள்பட பரபரப்புக்கு பஞ்சம் வராமல் பார்த்துக்கொள்ளும் தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜனும் கலந்துகொண்டார். அவரின் அன்றைய முழக்கத்தில் முக்கியமானது, “கேரளசினிமாவை நம் சினிமா பின்பற்ற வேண்டும்” என்பதே