நயன்தாரா படமா? ஓடிப்போயிடுங்க! : பழி வாங்கும் ஜி.வி.பிரகாஷ்

விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தவுடன் தன் படங்களைத் தவிர மற்ற ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைப்பதை தவிர்த்து விட்டார்.

ஆனால் ஜி.வி.பிரகாஷோ நடிப்பிலும் பிஸியாக இருந்து கொண்டு, மறுபுறம் தன்னைத் தேடி வரும் மற்ற ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

அப்படி தன்னைத் தேடி வருகிற எந்த ஹீரோவின் படமாக இருந்தாலும் இசையமைக்க சம்மதம் சொல்லும் ஜி.வி ஹீரோயின் நயன்தாரா ஜோடியாக நடிக்கிற படமென்றால் மட்டும் அந்தப் படங்களுக்கு இசையமைக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாராம்.

என்ன காரணம்?

வேறு ஒன்றுமில்லை. ஜி.வி புதிதாக நடிக்கும் ஒரு படத்துக்கு நயன்தாராவிடன் கால்ஷீட் கேட்டுப் பார்த்திருக்கிறார். நயனோ முடியாது, டேட்ஸ் இல்லை என்று ஜி.வியை ஓரங்கட்டி விட்டாராம்.

அதற்கு பழி வாங்கும் விதமாகத்தான் நயன்தாரா நடிக்கும் படங்களுக்கு இசையமைக்க மாட்டேன் என்கிற முடிவை எடுத்தாராம் ஜி.வி.

GV PrakashGV.Prakash KumarNayantharaஜி.வி.பிரகாஷ்ஜி.வி.பிரகாஷ்குமார்நயன்தாரா
Comments (0)
Add Comment