கலைஞருக்கு மரியாதை! – 50-வது பட அறிவிப்பை ஒத்தி வைத்த ஹன்ஷிகா!

மிழ்சினிமா ரசிகர்களால் ‘குட்டி குஷ்பு’ என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை ஹன்ஷிகா.

இன்று அவர் தன்னுடைய 27-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். வழக்கம் போல தனது அம்மா, அப்பா உள்ளிட்ட குடும்பத்தினருடன் பிறந்த நாளை கேக் வெட்டி எளிமையாகக் கொண்டாடியவர், தனது 50 வது புதுப்பட அறிவிப்பையும் இன்று வெளியிட திட்டமிட்டிருந்தார். ஹன்சிகாவின் முதல் தமிழ்ப்பட கதாநாயகனான நடிகர் தனுஷ் தான் அந்த அறிவிப்பை வெளியிடுவதாக இருந்தது.

ஆனால் தற்போது அந்த அறிவிப்பை ஒத்தி வைத்திருக்கிறார் ஹன்ஷிகா.

எதிர்பாராத விதமாக திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு. கருணாநிதி இறந்ததால், தன்னுடைய 50வது படத்தின் அறிவிப்பை தள்ளி வைப்பதாக தெரிவித்துள்ளார்.

கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக தன்னுடைய 50வது திரைப்படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்படவில்லை என்றும், விரைவில் புதிய தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார் ஹன்ஷிகா.

தற்போது தமிழில் ‘துப்பாக்கி முனை’, ‘100’ ஆகிய படங்களை வைத்திருக்கும் ஹன்ஷிகாவுக்கு கன்னடத்தில் ‘பி ஹேப்பி பிந்தாஸ்’ என்ற கன்னட திரைப்படமும், ‘மாப்பிள்ளை’யின் ஹிந்தி ரீமேக்கான ‘ஜமாய் ராஜாவும்’ படமும் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன.

HansikaHansika BirthdayKarunanidhi
Comments (0)
Add Comment