மித்ரன் எழுதி?! இயக்கி அதில் சிவகார்த்திகேயன் நடித்திருந்த படம் ஹீரோ. சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பப்படமானது. இரண்டாவது சோவிலே ரசிகன் “என்ன பாஸு இது” என்று கவுண்டர் அடித்து கலாய்த்தான். லாஜிக்கும் இல்லாமல் மேஜிக்கும் இல்லாமல் தள்ளாடிய படம் அதளபாதாளத்தில் விழுந்தது.
அந்தப்படத்திற்கு இப்போதும் ஒரு பலத்த அடி கிடைத்துள்ளது. அதாவது ஹீரோ படத்தின் கதை என்னுடையது என்று போஸ்கோ பிரபு எனும் உதவி இயக்குநர் வழக்குத் தொடர்ந்திருந்தார். வழக்கில் தீர்ப்பு இப்போது அவருக்கு சாதகமாக வந்துள்ளது. அதனால் இப்படத்தை டிவி மற்றும் டிஜிட்டலில் திரையிட முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது!
ஏற்கெனவே அமேசான் ப்ரேம் லிஸ்டில் இருந்த இப்படம் கோர்ட் தீர்ப்பால் லிஸ்டில் இருந்து தூக்கப்பட்டுள்ளது. மேலும் சன்டிவியும் இப்படத்தை ஒளிப்பரப்பாது. இதனால் படத்தின் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது