அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் முத்த காட்சிகளில் நடிகைகள் துணிச்சலாக நடிக்க தொடங்கி உள்ளனர். ஆனால் எனக்கு அப்படியொரு சங்கடம் எதுவுமே இதுவரை வந்ததில்லையாம்.
”நடிகையாக பிறகு எந்த கேரக்டராக இருந்தாலும் நடிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். தேவைப்பட்டால் முத்தக் காட்சிகளில் கூட நடிக்க வேண்டும், தயங்க கூடாது என்றார்கள்.
ஆனால் இதுவரை நான் நடித்த எந்த படத்திலும் முத்தக்காட்சி இல்லை. அந்த மாதிரியான காட்சிகள் இல்லாத பட வாய்ப்புகளே என்னைத் தேடி வந்துள்ளன. நான் நடித்துள்ள படங்களின் டைரக்டர்கள் யாரும் முத்தக் காட்சியில் நடிக்க கட்டாயப்படுத்தவில்லை. இது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.
இனிமேல் யாரும் முத்தக் காட்சியில் நடிக்கக் கூப்பிட்டாலும் சம்மதம் சொல்ல மாட்டேன். காரணம் எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. காதல் காட்சிகளில் நடிக்கவும் வெட்கப்படுவேன்” என்கிறார் கீர்த்தி சுரேஷ்.