பீப் சாங் மேட்டருக்கும், இதுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இது வேற சமாச்சாரம்!
பாலா இயக்கத்தில் சசிக்குமார், வரலட்சுமி நடித்திருக்கும் தாரை தப்பட்டை படத்துக்கு இளையராஜா தான் இசையமைத்திருக்கிறார். படப்பிடிப்பெல்லாம் முடிந்து தொழில்நுட்ப வேலைகள் வேகம் எடுத்திருக்கும் நிலையில் இது இளையராஜாவுக்கு 1000வது படமென்பதால் அதையொட்டி மிகப்பெரிய விழா ஒன்றை நடத்தி அதோடு படத்தின் பாடல்களையும் வெளியிடலாம் என்று முடிவு செய்திருந்தார்கள்.
ஆனால் இப்போது அந்த பாராட்டு விழா கேன்சல் ஆகி விட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மழை வெள்ளத்தின் பாதிப்பிலிருந்து இன்னும் சென்னை முழுமையாக விடுபடாத நிலையில் இப்படி ஒரு பாராட்டு விழாவை நடத்தினால் சரியாக இருக்குமா? என்று யோசித்திருக்கிறார் இயக்குநர் பாலா.
இளையரஜாவும் அதே மனநிலையில் தான் இருந்தார் என்பதால் பெருவிழாவை தவிர்த்து விட்டு சாதாரணமாக ஆடியோ சிடியை வெளியிட்டு விடலாம் என்று இறுதியான முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.