இந்த நிகழ்ச்சி மூலமாக சுமார் 10 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டு அதை காலியாகியிருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தின் கஜானாவை நிரப்ப திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதனால் எந்தவித சங்க விதிகளையும் பின்பற்றாமல் நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியை நடத்த தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதால் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடைபெறுமா? என்கிற சந்தேகம் எழுந்தது.
ஆனால் எப்படியாவது விழாவை நடத்தியே ஆக வேண்டுமென்று முடிவு செய்த விஷால் அதற்கான காய்களை சரியாக நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
அதில் ஒன்றாக இளையராஜா 75 விழாவில் கலந்து கொள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆளுநரும் விழாவில் கலந்து கொள்ள சம்மதம் சொல்லியிருக்கிறார்.
விழாவின் முதல்நாள் ஆளுநர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து ”இளையராஜா 75” மலரை வெளியிட உள்ளார்.
அதேபோல இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
ஆளுநர், மத்திய அமைச்சர், ரஜினி, கமல் உள்ளிட்ட அரசியல், திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ளும் விழா என்பதால் கண்டிப்பாக இசை நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் தடை விதிக்காது என்றே விஷால் அணியினர் கருதுகின்றனர்.