எமோஷனல் ஆக்ஷன் திரில்லர் படமான இதில் அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணாவு ஆகியோருடன் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கேமியோ ஃபிலிம்ஸ் சார்பில் சிஜே ஜெயகுமார் தயாரித்திருக்கிறார்.
வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இப்படத்தைப் பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் சிஜே ஜெயகுமார் இரண்டு வருட கடின உழைப்பையும், பல அவமானங்களையும் தாண்டி இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகிறது என்று வேதனையோடு பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர் ”படத்தின் மீது இருக்கும் நம்பிக்கையால் 5 நாட்களுக்கு முன்பே படத்தை பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டு காண்பிக்க இருக்கிறோம். அனுராக் காஷ்யாப் கேரக்டர் இளம் ரசிகர்களை மிகவும் கவரும். விஜய் சேதுபதி, நயன்தாரா காட்சிகள் ஆண்கள் கண்களிலும் கண்ணீரை வரவைக்கும்.
ஆக்ஷனில் நாங்கள் எந்த காம்ப்ரமைஸும் செய்யவில்லை. சண்டைக்காட்சிகளுக்கு தேவையான விஷயங்களை தயாரிப்பாளரிடம் எப்படி கேட்டு வாங்குவது என்ற கலை தெரிந்தவர் ஸ்டன் சிவா. ஆதியின் பின்னணி இசையோடு படத்தை பார்க்க நானும் ஆவலோடு இருக்கிறேன் என்றார் தயாரிப்பாளர் சிஜே ஜெயகுமார்.
இந்த சந்திப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து, நாயகி ராக்ஷி கண்ணா, ஆடை வடிவமைப்பாளர் பூர்த்தி, இணை தயாரிப்பாளர் அருண், விஜய், சைதன்யா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.