இம்மார்டல்! அறிமுக இயக்குநருடன் ஜிவி

 

அறிமுக இயக்குநர்களுக்கு ஜிவி பிரகாஷ் போன்ற நடிகர்கள் வாய்ப்பளிப்பது நல்ல முன்னெடுப்பு! இம்மார்டல் படத்தின் மூலம் ஜிவி பிரகாஷ் ஒரு அறிமுக இயக்குநருக்கு வாய்ப்பளித்துள்ளார். இந்தப்படத்தின் கதை
சென்னையைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நுழையும் ஒரு பெண்ணைத் தொடர்ந்து ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாகக் கொண்டுள்ளது. அனைவரும் ரசிக்கும் அம்சங்களுடன் கமர்ஷியல் படமாக “இம்மார்டல்” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா.

சென்னை மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஃபேண்டஸி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் சிஜி மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் முக்கிய இடம் பெறுகின்றன.

பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சக்தி ஃபிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

இப்படத்தில் ஜிவி பிரகாஷுடன் கயாடுலோஹர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள்னர். நேற்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

GV PrakashImmortal movie