”ஓ அதுவா… அடப் போங்க…” – சீக்ரெட் மேட்டரை சிரித்தே மழுப்பிய ‘மெர்க்குரி’ இந்துஜா!

‘மேயாத மான்’ படத்தில் ஹீரோ வைபவுக்கு தங்கச்சி கேரக்டரில் நடித்து, ஒரு பாட்டுக்கு போட்ட குத்தாட்டத்தால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் பாராட்டுகளைப் பெற்றவர் புதுமுக இந்துஜா.

தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் இந்துஜாவின் இரண்டாவது படமாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘மெர்க்குரி’ படம் வெளியானது.

இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்தவர் பிரபுதேவா. நயன்தாராவின் முன்னாள் காதலரான பிரபுதேவா ‘மெர்க்குரி’ படத்தில் சேர்ந்து நடித்த போது நாயகி இந்துஜாவின் காதல் வலையில் விழுந்து விட்டதாக கோடம்பாக்கத்தில் கடந்த சில வாரங்களாகவே செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.

இருவருமே இந்த செய்தி குறித்து இதுவரை வாய் திறக்காத நிலையில் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்துஜாவிடம், இந்த காதல் விவகாரம் குறித்து கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர் ”அதுவா…அட போங்க..” என்று சிரித்தபடியே மலுப்பலான பதிலைச் சொல்லி எஸ்கேப் ஆனார்.

பொதுவாக இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் நடிகைகள் உடனே மறுப்பார்கள். ஆனால் இந்துஜா சிரித்தபடியே மலுப்பியிருப்பது பிரபுதேவாவுடனான காதல் உண்மை தான் என்று உறுதியாகியிருக்கிறது.

மாஸ்டரு… என்னப் பாடு படுத்தப் போறாரோ..?

Actress IndhujaIndhujaPrabhu Deva
Comments (0)
Add Comment