சில வாரங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 3-ம் தேதி முதல் தொடங்கியது.
தினேஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தினை, இயக்குநர் பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்குகிறார்.
“தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” மற்றும் “மகிழ்ச்சி” ஆகிய ஆல்பங்களின் இசையமைப்பாளர் தென்மா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
“கபாலி”, ” காலா” ஆகிய படங்களின் கலை இயக்குநர் த.ராமலிங்கம் இப்படத்தில் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் பணியாற்றுகிறார்.
சென்னையில் இன்று தொடங்கிய படப்பிடிப்பை இயக்குனர் பா.இரஞ்சித் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.