ரெண்டு ஜெய் ; ஒரு அஞ்சலி : பலூனில் இருக்கு செம லவ் கெமிஸ்ட்ரி!

னசு முழுக்க காதல் நிரம்பி வழிய சூர்யா படத்தின் புரமோஷனுக்குக் கூட ஓடோடோடிச் சென்று அஞ்சலியுடன் தோசை சுடுகிறார் ஜெய்.

அவர் நடித்த ”பலூன்” படத்தின் புரமோஷனுக்கு அப்படத்தின் இயக்குநர் சினிஷ் மட்டும் தான் வந்திருந்தார். (முதல் படமாச்சே..?)

அஞ்சலி, ஜனனி ஐயர் என இரண்டு நாயகிகள் நடித்திருக்கும் இப்படத்தில் பலூன் விற்பவர், ஜெய் உதவி இயக்குநர் என டபுள் ரோலில் நடித்திருக்கிறார் ஜெய்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சரவணன் ஒளிப்பதிவு செய்ய இப்படத்தை ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தசாமி வெளியிடுகிறார்.

‘பலூன்’ என்கிற டைட்டிலைக் கேட்டாலே ஏதோ இது குழந்தைகளுக்கான படமோ என்கிற சந்தேகம் வரலாம். ஆவி பட பாணியில் தயாராகியிருக்கும் குழந்தைகளும் ரசிக்கக் கூடிய படமாம்.

”உதவி இயக்குனரான ஜெய் கதை எழுதுவதற்காக தன்னுடைய மனைவி அஞ்சலியுடன் கொடைக்கானல் செல்கிறார். அங்கு அவர் தங்குகிற வீட்டில் பல ஜென்மக்களுக்கு முன் ஒரு பலூன் வியாபாரி இருந்திருக்கிறார். அவருடைய ஆவி இவரை நிம்மதியா கதை எழுத விட்டுச்சா? இல்லையாங்கிறது தான் படத்தோட கதையாம் (இதைச் சொல்றதுக்கு சஸ்பென்ஸ்ங்கிற பேர்ல அம்பூட்டு நேரம் யோசிக்கிறாப்ல டைரக்டர் சினிஸ்!)

நிஜத்துல காதல் ஜோடியான ஜெய்- அஞ்சலி ஷூட்டிங் ஸ்பாட்ல எப்படி “எந்த தொந்தரவும் தரல, ரெண்டு பேருமே ரொம்ப ஒத்துழைப்பு கொடுத்து நடிச்சுக் கொடுத்தாங்க. சொல்லப்போன அவங்க ரெண்டு பேரோட லவ் கெமிஸ்ட்ரியும் படத்துல எனக்கு தேவைப்பட்டுச்சு, நிஜ லவ்வர்ங்கிறதுனால படத்துல இருக்கிற லவ் சீன்ஸ் எல்லாமே பெர்பெக்ட்டா அமைஞ்சிருச்சு” என்றார் படு உற்சாகமாக!

AnjaliBalloonBalloon MovieJaiJanani Iyer
Comments (0)
Add Comment