மணிரத்னம், ஷங்கர் போன்றவர்கள் போலத்தான் பாலா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் கதையே கேட்காமல் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்து விடுவார்கள் நடிகைகள்.
அதிலும் அறிமுக நடிகைகள் என்றால் கேட்கவே வேண்டாம். எத்தனை நாள் டேட்ஸ் வேண்டும் என்பதை மட்டும் கேட்டுக் கொள்வார்கள். எல்லாம் பாலா மீதான நம்பிக்கை தான். அதே நம்பிக்கையில் தான் ‘அவன் இவன்’ படத்தில் அறிமுகமானார் ஜனனி ஐயர்.
படம் ஓரளவுக்கு கல்லா கட்டினாலும் அந்தப் படத்தால் ஜனனிக்கு எந்த பிரயோசனமும் இல்லை. அதாவது புதுப்பட வாய்ப்புகளை எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அதோடு அவரது பெயரோடு ஒட்டிக்கொண்டிருக்கும் ஐயர் என்கிற ஜாதியும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஒரு சந்திப்பில் பத்திரிகையாளர்களே இதுகுறித்து கேட்ட போது அது என் அப்பா எனக்கு செல்லமாக வைத்த பெயர் என்றார் கூலாக…
ஆனால் இப்போது எந்த சாதியை செல்லமாக வைத்தாரோ? அதே சாதியை செண்டிமெண்ட் காரணமாக தனது பெயரிலிருந்து நீக்கி விட்டார்.
ஆமாம், இனி என்னை ‘ஜனனி’ என்று கூப்பிட்டால் மட்டும் போதும், சாதிப்பெயரை சேர்த்து கூப்பிட வேண்டாம் என்று நெருங்கியவர்களிடம், தெரிந்தவர்களிடம் சொல்பவர் படங்களின் டைட்டில் கார்டுகளிலும் ஜனனி என்று மட்டும் பெயரை போட சொல்கிறார்.
இப்பவாவது யாராவது சான்ஸ் கொடுங்கப்பா…