ஜவானின் எல்லா பாடல்களையும் ஜூக் பாக்ஸில் கேட்டு மகிழுங்கள்!

ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. அதே தருணத்தில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு… முன்னோட்டம் வெளியான பிறகு அடுத்த கட்டத்திற்கு சென்றது. ஆக்சன் என்டர்டெய்னரான இப்படத்தின் வெளியீடு நெருங்கி வருவதால், அதை அடுத்த கட்டத்திற்கு மேலும் உயர்த்த தயாரிப்பாளர்கள் தங்களுக்கு கிடைத்த எந்த வாய்ப்பையும் தவறவிடவில்லை. தற்போது ஜுக் பாக்சில் அனைத்து சூப்பர் ஹிட் பாடல்களையும் வெளியிட்டு பார்வையாளர்களுக்கு விருந்து அளித்திருக்கிறார்கள்.

‘வந்த எடம்’, ‘ஹய்யோடா’ , ‘ நாட் ராமையா வஸ்தாவையா..’ என ஜவான் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை மேலும் உயர்த்துவதற்காக தயாரிப்பாளர்கள் தற்போது ஜுக் பாக்சில் படத்தின் பாடல்களை வெளியிட்டுள்ளனர். அதில் பார்வையாளர்கள் படத்தின் அனைத்து பாடல்களையும் கேட்டு ரசிக்க முடியும்.

‘வந்த எடம்..’ எனத் தொடங்கும் பாடலை அனிருத் ரவிச்சந்தர் இசையில் பாடலாசிரியர் விவேக் எழுத, பாடகர் அனிருத் ரவிச்சந்தர் பாடியிருக்கிறார்.மென்மையான காதலும் மெல்லிசையுடன் கூடிய ‘ஹய்யோடா..’ எனத் தொடங்கும் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, அனிருத் இசையில், அனிருத் மற்றும் பிரியா மாலி ஆகியோர் இணைந்து அழகாகப் பாடியிருக்கிறார்கள். ‘நாட் ராமையா வஸ்தாவையா..’ எனத்தொடங்கும் பார்ட்டி பாடலுக்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலை பாடலாசிரியர்கள் விவேக் மற்றும் சைலேந்திரா எழுத, இந்த பாடலை அனிருத் ரவிச்சந்தர், ஸ்ரீ ராமச்சந்திரா மற்றும் ரக்ஷிதா சுரேஷ் ஆகியோர் இணைந்து உற்சாகமாக பாடியிருக்கிறார்கள்.

Actor Shah Rukh KhanAnirudh RavichanderDirector AtleeJawan movie