‘அடங்க மறு’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து புதுப்படங்களை ஒப்பந்தம் செய்து வருகிறார் ஜெயம் ரவி. இதில் ஸ்கிரீன் சீன் என்ற பட நிறுவனம் ஜெயம் ரவி நடிக்கும் மூன்று படங்களை வரிசையாக தயாரிக்க முன் வந்துள்ளது. இந்த மூன்று படங்களில் நடிக்க ஜெயம் ரவிக்கு சம்பளம் எதுவும் கொடுக்கப்படவில்லை.
அதற்குப் பதிலாக அந்த நிறுவனத்திற்கு சொந்தமாக போயஸ் கார்டனில் இருக்கும் மிகப்பெரிய பங்களா ஒன்றை மூன்று படங்களுக்கும் சேர்த்து சம்பளமாக வாங்கியிருக்கிறாராம் ஜெயம் ரவி.
வி.வி.ஐபிக்கள் அதிகம் வசிக்கும் போயஸ்கார்டனில் வசிப்பதையே பெரும் பாக்கியமாக கருதும் பிரபலங்கள் அங்கு ஏதாவது வீடு கிடைக்காதா என்று ஏங்குவார்கள். அந்த ஏக்கம் ஜெயம் ரவிக்கு இந்த ‘டீல்’ மூலம் நிறைவேறியிருக்கிறது.
சில வாரங்களுக்கு முன்பு தான் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி போயஸ் கார்டனில் பங்களா ஒன்றை வாங்கியதாக செய்தி வெளியானது. தற்போது அந்த வரிசையில் ஜெயம் ரவியும் இணைந்திருக்கிறார்.