பூலோகம் இயக்குநருக்கு மீண்டும் வாய்ப்பு : நன்றி மறக்காத ஜெயம் ரவி!

ரே ஆண்டில் மூன்று ஹாட்ரிக் ஹிட்டுகளை கொடுத்த ஹீரோ என்கிற பெருமையை சென்ற ஆண்டு இறுதியில் ரிலீசான ‘பூலோகம்’ படமும் ஜெயம்ரவிக்கு கொடுத்தது.

அப்படிப்பட்ட நிஜமான வெற்றிக்கு காரணமான அப்படத்தின் இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் புதுப்பட வாய்ப்பு எதுவும் இல்லாததால் கையை பிசைந்து கொண்டிருந்தார்.

விஷயம் ஜெயம் ரவி காதுகளை எட்டவும், உடனே அவரை வரச்சொல்லி அண்ணன் மோகன் ராஜாவுக்கு ஒரு படம், ரோமியோ ஜுலியட் லஷ்மணனுக்கு ஒரு படம் கொடுத்த மாதிரி கல்யாண் கிருஷ்ணனுக்கு ஒரு படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.

இதனால் உற்சாகமடைந்த கல்யாண் கிருஷ்ணன் இப்போது அப்படத்துக்காக திரைக்கதையை வடிவமைக்கும் வேலையில் முழு மூச்சோடு இறங்கியிருக்கிறார்.

நல்ல மனசு ஜெயம்ரவி!

BhoolohamJayam Raviஜெயம் ரவிபூலோகம்
Comments (0)
Add Comment