நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு… : அப்புறம் ஏன் ஜெயம்ரவி இப்படி?

”2015ம் ஆண்டு என்னோட கேரியர்ல மறக்க முடியாத ஆண்டு. தொடர்ந்து மூன்று மெகா ஹிட் படங்களை கொடுத்திருக்கிறேன். இதுக்கு மேல எனக்கு எதுவும் தேவையில்லை. ஒரு நடிகனா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.”

கடந்த டிசம்பரில் நிருபர்களை சந்தித்த ஜெயம்ரவி நெகிழ்ந்து பேசிய வார்த்தைகள் தான் இவை!

‘ரோமியோ ஜூலியட்’, ‘தனி ஒருவன்’, ‘பூலோகம்’ என மூன்று ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த தெம்பில் இருந்தவரைத் தேடி அடுத்தடுத்து புதுப்பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் தான் இருக்கின்றன.

இருந்தாலும் ஒவ்வொரு நடிகருக்கும் ஏதாவது ஒரு ஆசை இருக்குமல்லவா? அப்படி ஒரு ஆசை தான் ஜெயம்ரவிக்கும் வந்திருக்கிறது. ஆசை வந்தது ஆச்சரியமில்லை, அவர் எந்த மாதிரியான படத்தில் நடிக்க ஆசை என்பதை தெரிவித்திருப்பது தான் ”விபரீத ஆசை” என்று எல்லோரும் எச்சரிக்கிறார்கள்.

ட்விட்டரில் தனது ரசிகர்களுடன் உரையாடிய ஜெயம்ரவி ”வரலாற்றுப் படம்” ஏதாவது ஒன்றில் நடிக்க ஆசை,ஆனால் இதுவரை அப்படிப்பட்ட படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பே வரவில்லை என்று வருத்தத்தோடு கூறியிருக்கிறார்.

‘பாகுபலி’ படம் வெற்றியானதைத் தொடர்ந்து ஜெயம்ரவிக்கு அப்படி ஒரு ஆசை வந்திருக்கலாம், என்றாலும் அந்த மாதிரியான படங்களில் நடிக்கும் நடிகர்கள் வருடக்கணக்கில் கால்ஷூட் கொடுக்க வேண்டியிருப்பதால் மற்ற படங்களில் நடிக்க முடியாமல் போவதை நினைத்து சரித்திரப் படங்களுக்கு குட்பை சொல்லி வருகிறார்கள்.

நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜெயம்ரவிக்கு கேரியர் நல்ல முறையில் போய்க்கொண்டிருக்கும் போது இப்படி ஒரு ஆசையை வெளிப்படுத்துவது தேவைதானா..? என்று கவலைப்படுகிறார்கள் அவரது நலம் விரும்பிகள்.

நியாயமான கவலைதானே..?

Jayam Raviஜெயம் ரவி
Comments (0)
Add Comment