பிரதமர் ஒன்று சொல்லிவிட்டால் உடனே கேட்டுக்கு வெளிவந்து அதைச் செவ்வனே செய்யும் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏன் இப்படி சாத்தான்குளம் விவகாரத்தில் கம் என்று இருக்கிறார்? இப்படி பலரது கேள்விகளும் அவரை நோக்குகின்றன. ஆனால் ரஜினியோ கேட்டைத் தாண்டாமல் இருக்கிறார். ஊரடங்கு என்பதால் கேட்டைத் தாண்டாமல் இருப்பது நல்லது தான். அதே நேரம் இப்படியொரு அநீதி எளியவர்களுக்கு எதிராக நடந்துள்ளது. அதைப் பார்த்து ரஜினி இப்படி நாவடங்கி இருப்பது எவ்வகையில் நியாயம் என கேள்வி கேட்கிறான் எளிய ரசிகன்