கபடதாரி படத்தில் சுமன் ரங்கநாதன்

நடிகர் சிபிராஜ் நடிப்பில் கன்னட சினிமா “காவலுதாரி” தமிழிக் “கபடதாரி” எனும் தலைப்பில் உருவாகிறது. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றிற்காக நடிகை பூஜா குமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இப்போது அவருக்கு பதிலாக தென்னிந்திய சினிமா பிரபலமான சுமன் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். படத்தில் பல திருப்பங்கள் கொண்டதாக கதைக்கு பெரும் முக்கியத்துவம் மிக்க கதாப்பாத்திரமாக இவரது கதாப்பத்திரம் உள்ளதாம். மேலும் கன்னட பதிப்பில் இவரே இந்தக்கதாப்பாத்திரத்தை செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

சுமன் ரங்கநாதன் 90களில் தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து, மிகவும் புகழ்பெற்ற ஹீரோயினாக விளங்கியவர். நடிகர் விஜய்காந்துடன் இணைந்து நடித்த “மாநகர காவல்”. நடிகர் அர்ஜுனுடன் இணைந்து நடித்த “மேட்டுப்பட்டி” ஆகிய படங்கள் குறிப்பிடத் தக்கவை. சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த “ஆரம்பம்” படத்திலும் நடித்திருந்தார்

kabadadhaariSibirajsumanranganadhan
Comments (0)
Add Comment