தெலுங்கு ரீமேக் 32 கோடி : சூடு பிடித்தது கபாலி வியாபாரம்

த்தனை மாஸ் ஹீரோக்கள் வந்தாலும் ரஜினி படம் என்றால் அதன் மீது ஏற்படும் எதிர்பார்ப்பு அலாதியானது தான்.

படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் கபாலி திரைப்படம் அடுத்த மாதம் ஜூலையில் ரிலீசாகப் போகிறது.

வழக்கமான தனது தோஸ்த் இயக்குநர்களான கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு ஆகியோருடன் கூட்டணி வைக்காமல் இளம் இயக்குநர் ரஞ்சித்துடன் இணைந்திருப்பதால் இதுவரை எந்த ரஜினி படத்துக்கும் ஏற்படாத உச்சபட்ச எதிர்பார்ப்பு இந்தப்படத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் படத்தின் டீஸர் கூட இதுவரை எந்தவொரு தமிழ்ப்படமும் செய்யாத சாதனையை யூ-ட்யூப்பில் செய்தது.

அந்தளவுக்கு எதிர்பார்ப்பை கிளறி விட்டிருப்பதால் இப்போது அதன் வியாபாரமும் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இதற்கு முன் இல்லாத அளவுக்கு கபாலி விநியோக உரிமை உச்சத்தில் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஆமாம், ‘கபாலி’ படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை ‘சண்முகா பிலிம்ஸ்’ ப்ரவீன் மற்றும் சௌத்ரி ஆகியோர் ரூ.32 கோடி கொடுத்து பெற்றிருக்கிறார்களாம். அதேபோல இப்படத்தின் கன்னட ரிலீஸ் உரிமையை ரஜினியை வைத்து ‘லிங்கா’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் வாங்கியிருக்கிறாராம். இதுபோல தமிழ், மலையாளம், ஹிந்தி என மற்ற மொழிகளிலும் கபாலியின் வியாபாரம் சூட்டைக் கிளப்பியிருக்கிறது.

சும்மாவா… கபாலி டா….

KabalirajiniRajinikanthகபாலிரஜினிரஜினிகாந்த்
Comments (0)
Add Comment