‘கடாரம் கொண்டான்’ படத்திற்காக விக்ரம் பாடிய உற்சாகப் பாடல்

குருநாதர் கமல்ஹாசனை வைத்து அவரது தயாரிப்பிலேயே ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா மீண்டும் அவருடைய தயாரிப்பில் விக்ரமை வைத்து இயக்கி வரும் படம் ‘கடாரம் கொண்டான்’.

கமல்ஹாசன் வழங்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் நடித்து வருகிறார். மற்றும் நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து

சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீஸர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தில் நடிகர் சீயான் விக்ரம் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

“தீச்சுடர் குனியுமா?
தேடலில் உள்ள வீரனின் உள்ளம் பணியுமா?
எரிவா மேலே மேலே”

என ஆரமிக்கும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார்.

“கடாரம் கொண்டான் படத்திற்காக விக்ரம் சார் பாடிய பாடல் புத்துணர்ச்சி தருவதாக, ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாக, உற்சாகம் அளிப்பதாக அமைந்துள்ளது மகிழ்ச்சி. நிச்சயம் இந்தப் பாடல் தினமும் நமக்கு உற்சாகம் ஊட்டும் பாடலாக அமையும் என நம்புகிறேன்” என்றார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

GhibranKadaram KondanMovie NewsVikram
Comments (0)
Add Comment