நீங்க ஆசைப்பட்டுட்டீங்க..; ரசிகர்கள் பாவமில்லையா காஜல் மேடம்?

டிகைகளுக்கு எந்த நேரத்தில் என்ன ஆசை வரும் என்றே சொல்ல முடியாது.

இருந்தாலும் கேட்பது முன்னணி நடிகைகள் என்றால் அதை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என்று கோரிக்கையைக் கேட்பவர்கள் துடித்துப் போய் விடுவார்கள்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் காஜல் அகர்வாலுக்கு ‘நானும் ரவுடி தான்’ படத்தில் நயன்தாரா சொந்தக் குரலில் பேசியது போல தானும் தான் நடிக்கின்ற ஒரு படத்திலாவது சொந்தக் குரலில் டப்பிங் பேச ஆசை வந்திருக்கிறது.

இந்த ஆசையை தான் நடித்து வரும்‘கருடா’ படத்தின் இயக்குநர் திருவிடம் சொல்லியிருக்கிறார். காஜல் தமிழில் பேசி கேட்பதா? என்று முதலில் யோசித்த திரு முதலில் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள், அதன்பிறகு வாய்ஸ் நன்றாக இருந்தால் நீங்களே பேசி விடுங்கள் என்று அனுமதி கொடுத்து விட்டார்.

ஆசை நிறைவேறப்போகும் சந்தோஷத்தில் தமிழ் வாத்தியார் ஒருவரை வரவழைத்து தீவிரமாக தமிழ் கற்றுக் கொண்டு வருகிறாராம் காஜல்.

சித்ராதேவியோட வாய்ஸ் எப்படி இருக்குமோ..?

GarudaKajal Aggarwalகருடாகாஜல் அகர்வால்
Comments (0)
Add Comment