தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருக்கும் எல்லா நடிகைகளுக்கும் பாலிவுட்டில் ஒரு ரவுண்ட்டு வர வேண்டுமென்கிற ஆசை எப்போதுமே இருந்து கொண்டிருக்கும்.
த்ரிஷா, இலியானா, ஸ்ருதிஹாசன் என ஒரு சில முன்னணி நடிகைகள் ஆசையோடு பாலிவுட்டுக்குப் போய் ஒன்றிரெண்டு படங்களோடு பேக்கப் ஆகி ரிட்டர்ன் வந்த கதையெல்லாம் உண்டு.
அதிலும் இலியானாவெல்லாம் டஜன் கணக்கில் தேடி வந்த தெலுங்கு பட வாய்ப்புகளை தவற விட்டு விட்டு ஹிந்திக்குப் போய் வாய்ப்பே இல்லாமல் மீண்டும் தெலுங்கு திரையுலகில் சான்ஸ் கேட்டு வருகிறார்.
அசின் கூட அதிக பட்சம் அரை டஜன் ஹிந்திப் படங்களில் நடித்து விட்டு அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் மைக்ரோ மேக்ஸ் ஓனரோடு நேக்காக குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.
இந்த வரிசையில் இப்போது நடிகை காஜல் அகர்வாலும் ஏமாற்றப்பட்டு வருகிறாராம்.
தமிழ், தெலுங்கு படங்களில் அதிகம் கவர்ச்சி காட்டி நடித்திராத காஜல் சமீபத்தில் பாலிவுட் பட விழா ஒன்றில் கலந்து கொண்டபோது படுகவர்ச்சியான உடை அணிந்து போஸ் தந்தார். அது மட்டுமா? மேக்ஸிம் உள்ளிட்ட சில ஆண்கள் இதழ்களுக்கு கூட அரை நிர்வாண போஸ் கொடுத்துப் பார்த்தார்.
இப்படி நானும் ‘பாலிவுட்டுக்குத் தயார்’ என்பதை தனது செய்கைகள் மூலம் உணர்த்தியும் கூட இதுவரை ஒரு புதுப்பட வாய்ப்பு கூட அங்கிருந்து வரவில்லையாம்.
இதனால் நொந்து போனவர் தமிழிலும் எதிர்பார்த்த வாய்ப்புகள் இல்லாததால் இனி தெலுங்கு படங்களில் முழுக்கவனத்தையும் செலுத்துவது என்கிற முடிவோடு தெலுங்கானாவுக்கு வண்டியேறியிருக்கிறார்.