புகழின் உச்சிக்கு சென்ற பிறகும் முதல் பட தயாரிப்பாளர், இயக்குநரை மறக்காத ஓவியா!

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கிடைத்த புகழுக்குப் பிறகு ஓவியாவுக்கு புதுப்பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்திருக்கிறது.

என்னதான் புதுப்பட வாய்ப்புகள் குவிந்தாலும், தன்னை தமிழ்சினிமாவில் நாயகியாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரையும், இயக்குநரையும் மறக்காமல் மீண்டும் அவர்களோடு புதுப்படம் ஒன்றில் இணைகிறார் ஓவியா.

2010-ம் ஆண்டு விமல், ஓவியா நடிப்பில் A.சற்குணம் இயக்கத்தில் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ‘களவாணி’ படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தைத் தொடர்ந்து சுரேஷ் இயக்கத்தில் விமல் நடிப்பில் “எத்தன்” படத்தைத் தயாரித்து வெளியிட்டார்.

தற்போது பூணம் கவுர் நடிப்பில் மதிவாணன் இயக்கத்தில் “வதம்” படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார் தயாரிப்பாளர் நசீர். மே மாதம் இப்படம் வெளியாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து நான்காவது படமாக தனது ஷெராலி பிலிம்ஸ் சார்பில் நசீர் தயாரிக்கும் படம் ‘களவாணி 2’. முக்கிய நடிகர் நடிகையர் நடிக்க, மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளது. “களவாணி 2” படத்திற்கான படத்தலைப்பின் உரிமையை ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையே பெற்றுள்ளது.

இப்படத்தின் நடிக்கவுள்ள நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

kalavani 2OviyaSargunamVimal
Comments (0)
Add Comment