கமலைப் பிரிந்து விட்டேன் என்று நேற்று கெளதமி அறிவித்ததும் திரையுலகமே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் அவருடைய விளக்கத்தைப் பார்த்தது. அவ்வளவு ஏன் கமலின் ரசிகர்களும் அதே மனநிலையில் தான் இருந்திருப்பார்கள்.
சரி கெளதமி விளக்கம் கொடுத்தால் கண்டிப்பாக கமலிடமிருந்தும் விளக்கம் வந்தாக வேண்டுமே? அப்படி எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் இன்று கமலின் அறிக்கை என்ற பெயரில் மீடியாக்களில் ஒரு விளக்கம் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த விளக்கத்தை அவருடைய மக்கள் தொடர்பாளரே சமூகவலைத்தளங்களில் பகிர்ந்ததால் அதையே கமலின் விளக்கமாக மீடியாக்கள் பரப்பி வருகின்றன.
சுத்தமான தமிழில் பேசுபவர்களுக்கே கமல் விளக்கத்தை புரிந்து கொள்ள தனியாக டிக்ஷ்னரி தேவைப்படும். அப்படியிருக்கையில் கெளதமிக்கு விளக்கம் என்ற பெயரில் அவர் கொடுத்திருக்கும் விளக்கத்தை ஒன்றுக்கு மூன்று முறை படித்தாலும் படிப்பவர்கள் தலை கிறுகிறுத்து விழப்போவது நிச்சயம்.
அந்த விளக்கத்தைப் படிப்பவர்களுக்கு எல்லாம் தோன்றுவது ஒன்றே ஒன்று தான். கெளதமி எப்போது வைரமுத்து ஆனார்? இப்படி ஒரு விளக்கத்தை கொடுத்து காமெடி செய்திருக்கிறாரே கமல்.
இதோ அந்தக் கடிதத்தை நீங்களும் படித்து விடுங்கள். புரிந்தால் சந்தோஷம் என்று காலரை தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்!