ஹெச்.ராஜாவைப் பார்த்ததும் டிவி பெட்டியை உடைத்த கமல்!

நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பில் இருக்கும் ”மக்கள் நீதி மய்யம்” கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறார் கமல். அதில் ஸ்டாலின், மோடி, ஓ.பி.எஸ் ஆகியோர் அடுத்தடுத்து பேசுகிறார்கள்.

அதற்கு இப்படியே ஆண்டுக் கணக்கில் பேசிபேசி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களே என்பது போல் முகபாவனை காட்டும் கமல், நிறைவாக ”நீங்கள் எல்லாம் ஆண்டி இண்டியன்” என்று ஹெச்.ராஜா பேசுவதைக் கேட்டதும் கோபத்தின் உச்சிக்கே செல்லும் கமல் கையில் இருக்கும் ரிமோட்டை தூக்கி டிவி பெட்டி மீது எறிகிறார். அது உடையும் சத்தம் கேட்கிறது.

அதன்பிறகு முடிவு பண்ணிட்டீங்களா? என்று கேட்டவாறே பேசுகிறார்.

அது என்ன என்பதை கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள்…

election compaignkamalkamalhaasanMakkal Needhi Maiam
Comments (0)
Add Comment