பல இளம் இயக்குனர்கள் – நடிகர்களின் வெற்றிக்கு வழி வகுத்தவர் இளையராஜா – கமல்ஹாசன் புகழாரம்

 

மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடட் தயாரிப்பில் ஃப்ரான்சிஸ் மார்கஸ் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில், கீதன் பிரிட்டோ, ஈஷா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் “ஓய்”.

இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் இன்று மிகவும் எளிமையாக நடைப்பெற்றது. இப்படத்தின் இசையை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட இசைஞானி இளையராஜா பெற்றுக் கொண்டார்.

விழாவில் பேசிய கமல்ஹாசன் “தன் வசீகர இசையால் பல இளம் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் கனவு படங்களுக்கு வெற்றியை அடித்தளமாக அமைத்தவர் இளையராஜா.

’16 வயதினிலே’ உள்ளிட்ட பல படங்கள் அதற்கு சான்று. இன்று ஃப்ரான்சிஸ் மார்கஸ் இயக்கும் ஓய் படத்திற்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படமும் வெற்றி பெற்று சாதனை படைக்க எனது வாழ்த்துக்கள்” என்றார்.

IlayarajaKamal HassanOyee Audio Launchஆடியோ ரிலீஸ்இளையராஜாகமல்ஹாசன்
Comments (0)
Add Comment