திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘கங்குவா’ உள்ளது. நிச்சயம் நடிகர் சூர்யாவின் சினிமா பயணத்தில் மிகச்சிறந்தப் படைப்பாக இந்தப் படம் இருக்கும். ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல் ராஜா படத்தைத் தயாரிக்க, இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா படத்தை இயக்கியுள்ளார்.
அசத்தலான லொகேஷன், ஆடம்பரமான செட் மற்றும் பிரம்மாண்டமான புரொடக்ஷன் டிசைனை ‘கங்குவா’ கொண்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது ஒட்டுமொத்த படக்குழுவினரும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், நடிகர் சூர்யா ‘கங்குவா’ படத்தில் தனது கதாபாத்திரத்திற்கான டப்பிங் பணியை தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல்ராஜா, தனது அன்பு மகள் பெயரில் தொடங்கியுள்ள ஆத்னா ஆர்ட்ஸ் ஸ்டுடியோவில் தொடங்கியுள்ளார். இந்த ஸ்டுடியோ உலகத்தரத்தில் அமைந்துள்ளது.
போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதால், ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் எதிர்பார்ப்பு முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. இந்த படம் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவரும் வகையில் பல மொழிகளில் வெளியாகிறது. சிறப்பான சினிமா அனுபவத்தை இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும் என ரசிகர்களுக்கு படக்குழு உறுதி கொடுக்கிறது.