கொம்பன், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டிச் சிங்கம் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி வரும் நடிகர் கார்த்தி நடிப்பில் ‘மாநகரம்’ புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கைதி’ டீஸர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. முற்றிலும் வித்தியாசமான முறையில் இருந்த ‘கைதி’ பட டீஸரை பிரபலங்கள் பலரும் பாராட்டினர். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் வெளியீட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது.
இதனைத்தொடர்ந்து கார்த்தி தன் அடுத்த படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ‘ரெமோ’ படத்தை இயக்கி சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்த இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கலில் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி துவங்கியது. ‘கார்த்தி19’ என்கிற இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
‘கீதா கோவிந்தம்’ தெலுங்கு படம் மூலம் இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த நடிகை ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக நேரடித் தமிழ்ப்படத்தில்
கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் நெப்போலியன், யோகி பாபு, சதீஸ், லால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் இன்று திங்கள் முதல் திண்டுக்கல்லில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.தொடர்ந்து 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும். அனைவரையும் மகிழ்வித்து வரும் கார்த்தியின் மற்ற படங்கள் போல் இப்படமும் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் உருவாகியுள்ளது.