திடீரென்று கிளம்பிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்தி!

கார்த்தி தான் நடிப்பதாக வெளியான ஒரு படத்தின் செய்தி வதந்தி என்றும், அப்படி ஒரு படத்தில் நடிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

‘நீடி நாடி ஒகே கதா’ என்ற தெலுங்குப் படத்தை இயக்கியவர் ரவி உடுகுலா. ஸ்ரீ விஷ்ணு, சாட்னா டைட்னஸ் நடிப்பில் வெளியான ரிலீசான இந்தப்படம் ஆந்திர ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதனால் ஹிட்டான இந்தப் படத்தைக் கொடுத்த இயக்குனர் ரவு உடுகுலா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரு படத்தை இயக்குவதாகவும், அதில் கார்த்தி ஹீரோவாக நடிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.

மேலும், கார்த்தியிடம் ரவி உடுகுலா படத்தின் கதையைச் சொல்லி விட்டதாகவும், அதற்கு கார்த்தி க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் இப்படி பரவிய செய்தியை முற்றிலுமாக மறுத்திருக்கிறார் கார்த்தி.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ”ரவு உடுகுலா இயக்கத்தில் நான் நடிப்பதாக வெளியான செய்தி வதந்தி தான். அப்படி ஒரு படத்தில் நான் நடிக்கவில்லை. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வரும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நான் நடித்து முடித்திருக்கிறேன். சினிமா ஸ்டிரைக் முடிந்தவுடன் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள ‘கார்த்தி 17’ என்ற அடுத்த படத்தில் நடிக்கப் போகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

actor karthiKarthi
Comments (0)
Add Comment