ஆரம்பத்துல டவுட்டு; அப்புறமா ஹேப்பி : கார்த்தியை மிரள வைத்த இயக்குநர்!

‘மெட்ராஸ்’ படத்திலிருந்து கதைத் தேர்வில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் நடிகர் கார்த்தி. அதனாலேயே தொடர் தோல்விகளை கொடுத்துக் கொண்டிருந்த அவர் இப்போது தொடர் வெற்றிகளின் நாயகனாக வலம் வர ஆரம்பித்திருக்கிறார்.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் கழித்து சென்ற மாதம் கார்த்தியின் நடிப்பில் ரிலீசான ‘தோழா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது.

நல்ல கதையம்சம் என்பதையும் தாண்டி கமர்ஷியலாகவும் படம் ஹிட்டாகியிருப்பதால் உற்சாகத்தில் இருக்கும் கார்த்தி அந்த சந்தோஷத்தை சமீபத்தில் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

”இந்தப் படம் என்னை தேடி வந்தப்போ ஒருவித டென்ஷனோட தான் கமிட் ஆனேன்! என்னா தெலுங்கு இயக்குநரான வம்சி எப்படி இந்தக் கதையை தமிழ் ஆடியன்ஸுக்கு ஏத்தமாதிரி எடுப்பார்ங்கிற சந்தேகம் எனக்குள்ள இருந்துச்சு. ஆனா ஷூட்டிங் ஆரம்பிச்சதும் என்னோட சந்தேகம் தீர்ந்திடுச்சு.

தெலுங்கு வெர்ஷனுக்காக அவர் எழுதின வசனங்கள் எல்லாமே சூப்பரா இருந்துச்சு. அதேமாதிரி தமிழிலும் இருக்கணும்னு நெனைச்சப்ப தான் என் நண்பர் பரமு மூலம் ராஜுமுருகன் இப்படத்தில் வசனம் எழுத வந்தார். இப்படத்தின் வசனங்கள் பேசப்படுகிறது என்றால் அதற்கு ராஜுமுருகனோட உழைப்பு தான் காரணம்.

இப்படத்தின் பத்திரிகையாளர்களுக்கான காட்சி முடிந்ததும் எல்லோரும் கட்டிப்பிடித்து, ‘படம் சூப்பராக இருக்கிறது’ என்று பாராட்டிய போது ரொம்பவும் சந்தோஷப்பட்டேன். என்னோட முதல் படத்திற்கு பிறகு இந்த ‘தோழா’வுக்கு தான் இதுபோன்ற ஒரு பாராட்டு கிடைத்தது. உடனே துபாயில் இருந்த நாகர்ஜூனா சாருக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னேன். அவரும் ரொம்பவும் சந்தோஷப்பட்டார். படம் வெளியான நாளிலிருந்து, படத்தை பாராட்டி தொடர்ந்து ஃபோன் கால்ஸ் வந்தது.

இனிமே இந்தமாதிரி படங்கள் பண்ணனும்னு எனக்கு தோழாவோட வெற்றி எடுத்துக் காட்டியிருக்கு. கண்டிப்பா தோழா மாதிரியான நல்ல கதையம்சமுள்ள படங்களை செலெக்ட் பண்ணி நடிப்பேன்” என்றார் கார்த்தி.

KarthiThozhaகார்த்திதோழா
Comments (0)
Add Comment